×
Saravana Stores

நெல்லை சந்திப்பில் வளையதரசுற்று உயரம் அதிகரிப்பு

*மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை : நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில் உள்ள வளையதரசுற்று மழைக்காலத்தில் பாதிக்காமல் இருப்பதற்கு அதன் உயரத்தை அதிகரிக்கும் பணி நடந்தது.
நெல்லை நகர்ப்புற மின் பகிர்மான கோட்டத்தில் சந்திப்பு பஸ் நிலையம் அருகில் உள்ள வளையதரசுற்று மழைக்காலத்தில் பாதிக்காமல் இருப்பதற்கு அதன் உயரத்தை அதிகரிக்கும் பொருட்டு கடந்த ஜூன் 15ம் தேதியன்று நடந்த மாதாந்திர பராமரிப்பு பணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டு மேல்நிலை வழியாக மின் விநியோகம் வழங்கப்பட்டது.

மேலும் மழை வெள்ள பேரிடர் காலத்தில் மின் விநியோகத்தை உறுதிபடுத்தும் விதமாக உயரம் 6 அடி அதிகரித்த பின்பு மீண்டும் நேற்று முன்தினம் நடந்த மாதந்திர பராமரிப்பு பணியின் போது வளையதரசுற்று மீண்டும் நிர்மாணிக்கப்பட்டு அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்ற பின் அதன் வழியாக மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாலாபாக்யாநகர், சிந்துபூந்துறை, மற்றும் நெல்லை சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு இயற்கை இடர்பாடுகளின் போது மின் தடங்கல் ஏற்பட்டால் அந்த பகுதிகளுக்கு மாற்று வழியில் மின்சாரம் வழங்க ஏதுவாகும்.

இந்த பணிகளை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவுப்படுத்தினார். இதனால் மீண்டும் வளையதரசுற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பணிகள் மேற்கொண்ட நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் மேற்பார்வை மற்றும் தரவுகள் கையகப்படுத்துதல் செயற்பொறியாளர் ஷாஜகான், உதவி செய்ய பொறியாளர்கள் சிதம்பரவடிவு, சங்கர், உதவி மின் பொறியாளர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி மற்றும் பணியாளர்கள் பாராட்டு பெற்றனர்.

The post நெல்லை சந்திப்பில் வளையதரசுற்று உயரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nelli junction ,Power Board ,Nellai ,Nellai junction ,
× RELATED வாலாஜாபாத்தில் கனரக லாரி மோதி மின் வாரிய ஊழியர் பலி