×

செய்யாறு, ஆரணி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

செய்யாறு : செய்யாறு அருகே குயிலாரம்மன் கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தில் உள்ள குயிலாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடந்தது. விழாவினை ஒட்டி கடந்த 5ம் தேதி காலை மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது.

6ம் தேதி மாலை மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாரதனை நடந்தது‌. நேற்று காலை மங்கல இசையுடன் விக்னேஸ்வரர் பூஜை, இரண்டாம் கால பூஜை, மகாபூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதில், மோரணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், இரவு 7 குயிலாரம்மன் வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது.

ஆரணி: ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து 108 கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹூதி, அக்னி பிரதிஷ்டை, புண்யவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல்கால யாகபூஜை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு, மஹா தீபாராதனை ஆகியன நடந்தது.

தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. விழாவில், ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு அம்மன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.

The post செய்யாறு, ஆரணி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Amman ,temple ,kumbabhishekam ,Arani, Seyyar ,Seiyaru ,Kumbabhishek ceremony ,Quilaramman temple ,Swami ,Moranam village ,Seyyar ,Kumbabhishekam ceremony ,
× RELATED மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்