×
Saravana Stores

வடுவூர் அருகே தனியார் நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல், வாலிபர் கைது

மன்னார்குடி, ஜூலை 8: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் சேனியர் தெருவை சேர்ந்தவர் சூர்யா (33). இவர் வடுவூரில் இயங்கி வரும் தனியார் மைக்ரோ பைனா ன்ஸில் கடன் வசூல் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வடுவூர் அடுத்த சாத்தனூர் கிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வீட்டிற்கு பணம் வசூல் செய்ய நேற்று முன் தினம் சென்ற போது, தான் ஒட்டி வந்த பைக்கை அங் கிருந்த வீடு ஒன்றின் அருகில் நிறு த்தி விட்டு சென்றார்.அப்போது, குடிபோதையில் அங்கு நின்றிந்த அஜீத் குமார் (29) என்ற வாலிபர் பைக்கை ஏன் இங்கு நிறு த்தி விட்டு செல்கிறாய், பெண்களுக்கு மட்டும் தான் பைனான்ஸ் கொடுப்பீங்களா, எங்களுக்கு எல்லாம் தர மாட்டிங்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.மேலும், பெண் என்றும் பாராமல் சூர்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முதுகில் கீறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து அவரை மீட்டனர்.

தனியார் மைக்ரோ பைனான்ஸ் பெண் ஊழியரை வாலிபர் ஒருவர் குடி போ தையில் தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இதையடுத்து, தனியார் மைக்ரோ பைனான்ஸ் பெண் ஊழியர் சூர்யா வடு வூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்தான மேரி, எஸ்ஐ பிரபு உள்ளிட்டோர் வழக்கு பதிந்து வாலிபர் அஜீத் குமாரை கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

The post வடுவூர் அருகே தனியார் நிதி நிறுவன பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல், வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vaduvur ,Mannargudi ,Surya ,Annavasal Senior Street, Mannargudi, Tiruvarur district ,Chatanur ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியதாரர்களை குறிவைக்கும் இணைய...