×

மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூர், ஜூலை 8: வார விடுமுறை நாளான நேற்று, மேட்டூர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி விட்டு, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர் குடும்பத்துடன் அணை பூங்கா சென்று விருந்துண்டு மகிழ்ந்தனர். மான் பூங்கா, முயல் பண்ணை, மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை ஆகியவற்றை பார்த்து மகிழ்ந்தனர். சிறுவர்களும், பெரியவர்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். நேற்று மேட்டூர் அணை பூங்காவிற்கு 5,396 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதன் மூலம் ₹53,960 பார்வையாளர்கள் கட்டணமாக வசூலானது. பவள விழா கோபுரத்தை காண 799 பார்வையாளர்கள் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ₹7,990 வசூலானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மேட்டூர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Mettur Dam Park ,Mettur ,Cauvery ,Muniyappan ,Dam Park ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும்...