×

ஜனநாயக முறைப்படி முதல்வர், அமைச்சரவை தேர்தல்

வேதாரண்யம், ஜூலை 8: வேதாரண்யம் தாலுகா நெய் விளக்கில் அமைந்துள்ளது நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி. இப் பள்ளியில் 175 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப் பள்ளியில் முதல்வர் மற்றும் அமைச்சரவை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் ஆறு முதல் எட்டு வரை உள்ள 95 மாணவர்களில் 90 பேர் வாக்களித்தனர் பள்ளியின் முதலமைச்சர் கல்வி அமைச்சர் குடிநீர் அமைச்சர் சுகாதார அமைச்சர் சத்துணவு அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது வாக்களிப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு இளம் வயதிலேயே எடுத்துரைக்கும் வகையில் தேர்தல் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் நடத்தினர் மாணவ மாணவிகளுக்குவாக்கு சீட்டு வழங்கி வாக்குப்பெட்டி வைத்து நடத்தி இந்த தேர்தலில் மாணவ மாணவிகள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் முடிவு இன்று திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கைநடத்தி அறிவிக்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி தெரிவித்தார்.

The post ஜனநாயக முறைப்படி முதல்வர், அமைச்சரவை தேர்தல் appeared first on Dinakaran.

Tags : of Chief Minister ,Vedaranyam ,Neyvilaku Panchayat Union Middle School ,Neyvillak, ,taluk ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே விசைப்படகில் ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியது