திருப்புவனம், ஜூலை 8: திருப்புவனம் புதூர் பஜனை மடத்தெருவில் வெற்றிலை கொடிக்கால் விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பனைமர திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி பனைமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏழாம் நாளில் பஜனை மடத்தெருவில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.
நேர்த்திக்கடன் விரதமிருந்த பக்தர்கள் 120 அடி நீளமுள்ள மலர்மாலையை தலையில் சுமந்து சென்றனர். பொன் முனியாண்டி கோயில் அருகே உள்ள பனைமரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. காப்புக்கட்டி விரதமிருந்த இளைஞர்களில் சிலர், 60 அடி உயர பனைமரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று மாலை அணிவித்தனர். பொன் முனியாண்டி சுவாமிக்கும், பனைமரத்திற்கும் பக்தர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர்.
The post திருப்புவனத்தில் பனை மர திருவிழா appeared first on Dinakaran.