×

கூட்டுறவுகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற கருத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் மக்களுக்கு சர்வதேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையொட்டி ரத்ததான முகாம்கள், மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடத்தப்பட்டன என்று அமைச்சர் ெபரியகருப்பன் கூறினார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிக்கையில்:

சர்வதேச கூட்டுறவு தினம் ஆண்டுதோறும் ஜூலை முதல் சனிக்கிழமை அன்று 1923ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, கூட்டுறவுகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற மைய கருத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வி திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு, ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு சர்வதேச கூட்டுறவு தினத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி ரத்ததானம், மரக்கன்றுகள் நடும் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் கூட்டுறவு வளர்ச்சிகுறித்த பேச்சுப் போட்டிகள் மற்றும் ”உலக பொருளாதாரத்தில் கூட்டுறவின் ஈடுபாடு” என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் “உறுப்பினர் சேர்க்கை முகாம்” மற்றும் “கடன் மேளாவும்” நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.

The post கூட்டுறவுகள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகின்றன என்ற கருத்தில் சர்வதேச கூட்டுறவு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : International Day of Co-operatives ,Minister ,Periyakaruppan ,CHENNAI ,Ebariyagaruppan ,Minister of Cooperatives ,International Cooperative Day ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு (Kooturavu)” என்ற செயலியினை...