×

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பொது சுகாதாரதுறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் ரேபிஸ், புருசெல்லோசிஸ், சிஸ்டிசெர்கோசிஸ், ஜப்பானிய மூளைஅழற்சி, பிளேக், லெப்டோஸ்பிரோசிஸ், ஸ்க்ரப் டைபஸ், கேஎஃப்டி ஆகிய நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா, நிபா, சிசிஎச்எப், எச்1என்1 உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. எனவே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை: விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தினம் ஜூலை 6ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே அதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவம், கால்நடை, வனவிலங்குகள் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் கால்நடை துறைகள் மற்றும் மருத்துவ கிளினிக் உடன் இணைந்து விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும். விலங்குகள் மூலம் பரவும் நோய்களை தடுக்க மருத்துவ கல்லூரிகள், வேளாண் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி பட்டறை நடத்த வேண்டும். உள்ளூர் விவசாயிகளுக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

The post விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பொது சுகாதாரதுறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,Chennai ,Tamil Nadu ,India ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள...