சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க புரட்சிகரமான மாற்று சிந்தனைக்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். எந்த ஜாதி அடையாளத்தை வைத்து ஒடுக்கினார்களோ, அந்த அடையாளத்தை வைத்து வகுப்பு பிரதிநிதித்துவத்தை கோரவும், இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் சம பங்கு கோரவும், அந்த அடையாளங்களின் தேவை குறித்த பார்வையை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துக் கூறவும் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் சூளுரை ஏற்போம்.
அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் போன்றோர் எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தார்களோ, அவர்கள் வகுத்த அந்த பாதை இந்தியாவில் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தலித் சமுதாயத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கேவும், தமிழகத்தில் நானும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post இரட்டைமலை சீனிவாசன் வகுத்த பாதை இந்தியாவில் வெற்றி பெறும் நிலை வந்துள்ளது: செல்வப்பெருந்தகை புகழாரம் appeared first on Dinakaran.