×
Saravana Stores

பஞ்சாப், ம.பி மாணவர்கள் கீழடியை கண்டு பிரமிப்பு

திருப்புவனம்: மாநிலங்களுக்கு இடையேயான கலாசாரம், பழக்கவழக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேச மாணவ, மாணவிகள் 20 பேர் ஏழு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். நேற்று கீழடி வந்த அவர்கள் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கீழடி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை நேரில் கண்டு ரசித்தனர். ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சிவப்பு நிற பானை, உறைகிணறுகள், சுடுமண் பானைகளை கண்டு ரசித்தனர்.

2,600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள் நாகரிகம், கல்வியறிவு, விவசாயம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கியதற்கான சான்று கிடைத்த இடத்தை நேரில் கண்டு வியந்தனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், ‘‘ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்றவற்றை மிஞ்சும் வகையில் இங்கு மனிதர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். திறந்தவெளி அருங்காட்சியகத்தில் இதனை காணும்போது ஆச்சர்யமாக உள்ளது’’ என்றனர்.

The post பஞ்சாப், ம.பி மாணவர்கள் கீழடியை கண்டு பிரமிப்பு appeared first on Dinakaran.

Tags : Punjab ,P. ,Madhya Pradesh ,Tamil Nadu ,Geezhadi ,Keezhadi Open Air Museum ,Keezhadi Museum ,Keezhadi ,
× RELATED டிவி சேனலுக்கு பேட்டி அளிக்க பஞ்சாப்...