×
Saravana Stores

ரூ.800 கோடி எங்க இருக்குனு தெரியாது; மூட்டை தூக்கி பிழைப்பேன்: சொல்கிறார் சரத்குமார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜக பிரமுகர் நடிகர் சரத்குமார் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘முன்பு நடந்த தேர்தல்களில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பிரசாரம் செய்த நான், காலத்தின் கட்டாயத்தால் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற்ற வேண்டும் என்பதால் எனது கட்சியை பாஜகவுடன் இணைத்தேன். தமிழகத்தில் பலரும் கட்சி நடத்தி வருகிறார்கள் பிறருக்கு துதிபாடும் நிலையில்தான் அவர்கள் உள்ளனர்.

தெருத்தெருவாக சைக்கிளில் பேப்பர் போட்டவன் நான். மக்களால் உயர்த்தப்பட்டவன் தான் இந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். எனது மகள் திருமணத்திற்கு ரூ.800 கோடி செலவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள். அது எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியாது. என்னை இப்போது விட்டால் கூட மூட்டை தூக்கி பிழைப்பேன், எனக்கு நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளதால் தான் இன்றும் திடமாக உள்ளேன், என்றார்.

The post ரூ.800 கோடி எங்க இருக்குனு தெரியாது; மூட்டை தூக்கி பிழைப்பேன்: சொல்கிறார் சரத்குமார் appeared first on Dinakaran.

Tags : Sarathkumar ,BJP ,Vikravandi ,BMC ,AIADMK ,DMK ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு..!!