×

பயிற்சிக்கு வந்த மாணவிகளை பயிற்சியாளர் பலாத்காரம் செய்த விவகாரம்: கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் சங்கத்தின் திருவனந்தபுரம் மாவட்ட பெண்கள் பயிற்சியாளராக இருந்தவர் மனு. கடந்த 3 மாதங்களுக்கு முன் இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது 6 மாணவிகளை லாட்ஜ் அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும், இந்திய கிரிக்கெட் சங்க தேர்வாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி மாணவிகளின் ஆபாசப் புகைப்படங்களை எடுத்ததாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார் மனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேரள மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்கக் கோரி கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post பயிற்சிக்கு வந்த மாணவிகளை பயிற்சியாளர் பலாத்காரம் செய்த விவகாரம்: கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Human Rights Commission ,Kerala Cricket Association ,Thiruvananthapuram ,Manu ,Tenkasi ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை குழு அமைப்பு