லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், சரித்திரத்தில் இல்லாத அளவு 28 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில்,கேரளாவை சேர்ந்த ஆண் செவிலியர் சோஜன் ஜோசப்(49) வெற்றி பெற்றுள்ளார். இவரின் சொந்த ஊர்,கேரளா,கோட்டயத்தில் உள்ள கைப்புழா. பெங்களூரு அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்துள்ளார். கடந்த 2001ல் இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு மருத்துவ பராமரிப்பில் பட்ட மேல்படிப்பு படித்தார்.
அதன் பிறகு கென்ட் நகரில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார். இந்த துறையில் படிப்படியாக உயர்ந்து தேசிய மருத்துவ சேவையின்(என்எச்எஸ்) இயக்குனரானார். பல்வேறு சமூக அமைப்புகளிலும் இடம் பெற்றுள்ள ஜோசப் உள்ளூர் கவுன்சிலராகவும் பணியாற்றினார். தற்போது ஆஷ்போர்டு தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த தலைவர் தமியன் கிரீனை வீழ்த்தியுள்ளார். கேரளாவை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
The post வேலைக்காக இங்கிலாந்து சென்றவர் எம்பியாக தேர்வு: கன்சர்வேட்டிவ் எதிர்ப்பு அலையில் வென்ற கேரள செவிலியர் appeared first on Dinakaran.