×

யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி

முனிச்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றிரவு நடந்த 3வது கால் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 2 அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதியில் 75வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோல் அடித்தது. அடுத்து 80வது நிமிடத்தில் அதற்கு பதிலடி கொடுத்து இங்கிலாந்து அணி கோல் அடித்தது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதல் நேரத்திலும், 2 அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போட்டி சூட் அவுட்-க்கு சென்றது. அதில் இங்கிலாந்து 5 – 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதுபோல் இன்று காலை நடந்த மற்றொரு 4வது கால் இறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் 35வது நிமிடத்தில் துருக்கி வீரர் அக்காய்தின் அந்த அணிக்கு முதல் கோலை அடித்தார். 55வது நிமிடத்தில் அந்த அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் குல்லர் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றது. இதனால், எளிதாக கிடைக்க வேண்டிய கோல் வாய்ப்பு நழுவியது. அடுத்து 70வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தது.

அதன் பின் 76வது நிமிடத்தில் துருக்கி வீரர் முல்டூர் பதற்றத்தில் துருக்கியின் கோல் பகுதியிலேயே கோல் (சேம்சைடு) அடித்தார். இதையடுத்து நெதர்லாந்து 2 – 1 என முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவு வரை துருக்கி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் துருக்கி தோல்வி அடைந்தது. நெதர்லாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இதையடுத்து வரும் 10ம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், 11ம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.

The post யூரோ கோப்பை கால்பந்து சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி: சேம்சைடு கோலால் வெளியேறியது துருக்கி appeared first on Dinakaran.

Tags : EURO CUP ,SWITZERLAND ,ENGLAND ,TURKEY ,SAMSIDE ,Munich ,2024 Euro Cup football series ,Dinakaran ,
× RELATED டயமண்ட் லீக்கில் ஹாட்ரிக் சாதனை: வெள்ளி வென்றார் நீரஜ்