×

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

சென்னை: சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பெரம்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது. ஆம்ஸ்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். ஆம்ஸ்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்

அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும். சாமானிய தலித் முதல் தலைவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

The post சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Liberation Leopard Party ,Thirumavalavan ,Armstrong ,Perambur, Chennai ,Chennai ,Perambur Municipal ,School ,Campus ,Democratic ,Amsrang massacre ,Thirumavalavan Anjali ,
× RELATED முரண்பாடு உருவாக்குவதே ஆளுநரின் நோக்கம்: திருமாவளவன் பேட்டி