×
Saravana Stores

கோயில் கும்பாபிஷேக விழா

கமுதி, ஜூலை, 7: கமுதி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு யஜமான ஸங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம்
தனபூஜை, தீபாராதனையும், மாலை க்ராமசாந்தி நடைபெற்றது. பின்னர் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம் பூர்ணாஹூதி போன்றவை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள் கோயில் முன்பு நடைபெற்று வருகிறது. வரும் 12ம் தேதி காலை 6.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 

The post கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Temple Kumbabhishek ceremony ,Kamudi ,Kamudi Muthumariamman Temple Kumbabhishek ceremony ,Yajamana Sankalpam ,Vigneswara Pooja ,Punyahavasanam Dhanapooja ,Deeparathana ,Kramasanti ,Temple Kumbhabhishek ceremony ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா