×

அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மாவட்டத்தில் அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் நடந்த மாநில, மாவட்ட அளவிலான கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) சாந்தகுமார் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலை போட்டிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, கோயம்புத்தூர் மண்டல கலை பண்பாட்டு மையத்திற்கு உட்பட்ட ஈரோட்டில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பி.பெ. அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் குரலிசை பிரிவில் முதல் இடத்தை திரிஷா. 2ம் இடத்தை சுமித்ரா, 3ம் இடத்தை ஜெயராமன், கருவி இசை பிரிவில் முதல் இடத்தை திருவேங்கடசாமி, 2ம் இடத்தை சாகேத்ராம், 3ம் இடத்தை ராகவேந்திரன், பரதநாட்டிய பிரிவில் முதல் இடத்தை ஜெய்ஷா, 2ம் இடத்தை குணவதி, 3ம் இடத்தை நித்யா, கிராமிய நடன பிரிவில் முதல் இடத்தை ஜெகதீஸ்வரன், 2ம் இடத்தை ஜீவலதா, 3ம் இடத்தை திவ்யபாரதி, ஓவிய பிரிவில் முதல் இடத்தை பவித்ரா, இரண்டாம் இடத்தை காருண்யா, மூன்றாம் இடத்தை ஜெயராமன் ஆகியோர் பிடித்தனர்.

இந்நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், 2ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500, 3ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நீலமேகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோபி, ஜூலை 7: கோபி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி 5வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டி அமைத்தல், 6வது வார்டுக்குட்பட்ட பள்ளிக்கூட வீதியில் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைத்தல், 4வது வார்டுக்குட்பட்ட காமாட்சியம்மன் கோயில் வீதியில் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் சபி முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை பழனிச்சாமி வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பவானி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் துரைராஜ், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, சலங்கபாளையம் பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி துணைத்தலைவர் மாலதி குணசேகரன் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Govt Art and Culture Department ,Erode ,District Revenue Officer ,TRO ,Santhakumar ,Government Arts and Culture Department ,Government of Tamil Nadu ,Government Art and Culture Department ,Dinakaran ,
× RELATED சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து