×

தூத்துக்குடி கோரம்பள்ளம் குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்பு

ஏரல், ஜூலை 7: தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் ஸ்காட் கல்விக் குழுமத்தின் சார்பில் செயல்படும் குட்ஷெப்பர்ட் மாடல் சிபிஎஸ்இ பள்ளியில் பள்ளி மாணவத் தலைவர், வகுப்புத் தலைவர்கள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் ராபர்ட்பென் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, பள்ளி மாணவர் தலைவர், துணைத் தலைவர் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கு பேட்ஜ் அணிவித்து பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து மாணவர் தலைவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி கோரம்பள்ளம் குட்ஷெப்பர்ட் மாடல் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Good Shepherd Model School ,Tuticorin ,Korampallam ,Eral ,Good Shepherd Model CBSE School ,Scott Education Group ,Thoothukudi ,Principal ,Robert Penn ,Korampallam Good Shepherd Model School ,
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில்...