×

தடையால் பிச்சைக்காரன் 2 படத்துக்கு இழப்பு: விஜய் ஆண்டனி வேதனை

சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படம்
பிச்சைகாரன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அவரே இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி அன்று வெளியாகும் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் படம் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாங்காடு மூவிஸ் நிறுவனம் தரப்பில் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக் கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இப்போது விஜய் ஆண்டனி தரப்பில் அளித்த பதில் மனு தாக்கலில், ஆய்வுக்கூடம் என்ற படம் குறித்து எந்த ஒரு தகவலும் தமக்கு தெரியாது என்றும், அந்த படத்தை பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளிப்போனதால் வியாபார ரீதியாக தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விஜய் ஆண்டனி அந்த பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

The post தடையால் பிச்சைக்காரன் 2 படத்துக்கு இழப்பு: விஜய் ஆண்டனி வேதனை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony Angam ,Pichaikaran ,Sasi ,Vijay Antony ,Vijay Antony Angham ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மார்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மது விற்ற வியாபாரி கைது