×

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா

சென்னை: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா பெண்கள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் தெ.ஆ 12 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.அதனால் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் லாரா தலைமையிலான தெ.ஆ அணி முன்னிலைப் பெற்றுள்ளது. ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை 3-0, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

அதே போல் டி20 தொடரையும் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய வீராங்கனைகள் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்துது. ்ஆனால் டஸ்மின் பிரிட்ஸ், மரிஸன்னே, லாரா போன்றவர்களின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி கைவிட்டுப்போனது.

இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையிலான 2வது டி20 ஆட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் தெ.ஆவின் பிரிட்ஸ், இந்தியாவின் ரிச்சா காயமடைந்தது இரு அணிக்கும் பாதகமாக இருக்கலாம். பிரிட்சுக்கு பதில் சுனே, ரிச்சாவுக்கு பதில் உமா சேட்ரி விக்கெட் கீப்பராக இன்று களம் காணுவர். வெற்றிக்காக மந்தனா, ஷபாலி, ஜெமீமா ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியிருக்கும்.

காரணம் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க, இந்தியாவுக்கு தான் வெற்றி அவசியம். அதேபோல் ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் ஆன, தெ.ஆ இன்றைய ஆட்டத்தில் வென்றால் டி20 தொடரை வென்று ஆறுதல் அடையலாம். அதனால் வெற்றிக்காக இரு அணிகளும் முனைப்புக் காட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும்.

 

The post தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா appeared first on Dinakaran.

Tags : T20 ,South Africa ,India ,Chennai ,T20I ,Dinakaran ,
× RELATED 3வது டி.20 போட்டியில் 8 விக்கெட்...