×
Saravana Stores

இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற உமா குமரன் உலக தமிழினம் பெருமை கொள்கிறது: வைகோ வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்ட்ரா போர்ட் அன்ட் பவ் தொகுதியிலிருந்து உமா குமரன் என்ற தமிழீழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரி 19,145 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதைக் கண்டு உலகத் தமிழினம் பெரு மகிழ்ச்சி கொள்கிறது.
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளால் அங்கிருந்து புலம் பெயர்ந்து லண்டனில் தஞ்சம் அடைந்த உமா குமரனின் பெற்றோர் 40 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். குயின்மேரி பல்கலைக் கழகத்தில் அரசியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்த உமா குமரன், 2000ம் ஆண்டில் நாடாளுமன்ற விவகார துணை இயக்குநராகவும் பணியாற்றி அனுபவங்களைப் பெற்றவர். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரிய உமா குமரனை மதிமுகவும், தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழ் மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துக் கூறி மகிழ்கிறார்கள். இந்த தகவலை மின்னஞ்சல் மூலம் உமா குமரனுக்கு வாழ்த்து செய்தியாக அனுப்பியுள்ளேன்.

The post இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்ற உமா குமரன் உலக தமிழினம் பெருமை கொள்கிறது: வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamils ,Uma Kumaran ,UK ,Vaiko ,CHENNAI ,Madhyamik General Secretary ,Labor Party ,Tamil Eelam ,Straw Port ,Pow Constituency ,Vaiko Bharti ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே மறுவாழ்வு...