- உமா குமாரன்
- பிரிட்டிஷ்
- சென்னை
- தமிழர்கள்
- மயூரன் செந்தில்நாதன்
- கவின் ஹரன்
- கமலா குகன்
- நாரணி ருத்ர ராஜன்
- கிருஷ்ணா
- டெவின் பால்
- ஜாகிர் உசேன்
- தின மலர்
சென்னை: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் 8 தமிழர்கள் களம் கண்டனர். அதன்படி உமாகுமரன், மயூரன் செந்தில்நாதன், கவின் ஹரன், கமலா குகன், நரணி ருத்ரா ராஜன், கிருஷ்ணி, டெவின் பால் மற்றும் ஜாஹீர் உசேன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஸ்ட்ராட்ஃபோர்ட் – பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமரன் மட்டும் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார்.
இதனிடையே “பிரிட்டனின் ஸ்ட்ராட்ஃபோர்ட் – போ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தன்னை வாழ்த்தியதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள உமா குமரன் ‘‘உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி; ஸ்ட்ராட்ஃபோர்ட் – போ மக்கள் என் மீதும், எங்கள் சமூகத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை திருப்பி செலுத்தும் பொறுப்பை நான் புரிந்து கொண்டு ஆழமாக உணர்கிறேன்’’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
The post பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி appeared first on Dinakaran.