×

பணம் தந்தால்தான் திறப்பு விழாக்களுக்கு வருவேன்: ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் தற்போது ஒன்றிய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் குருவாயூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேசிய சில கருத்துக்கள் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ஏதாவது திறப்பு விழாக்களுக்கு என்னை இலவசமாக அழைக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது. எந்த திறப்பு விழாவுக்கு வந்தாலும் நான் நடிகன் என்ற முறையில் பணம் வாங்குவேன். அந்தப் பணத்தை நான் என்ன செய்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்’’ என்றார்.

ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் இந்தப் பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னுடைய பேச்சு சிக்கலாகி விட்டது என்பதை உணர்ந்த சுரேஷ் கோபி உடனடியாக பல்டியடித்தார். அரசு நிகழ்ச்சிகளுக்கு பணம் வாங்குவேன் என்று நான் கூறவில்லை என்றும், வணிக ரீதியில் நடைபெறும் திறப்பு விழாக்களுக்கு மட்டுமே பணம் வாங்குவேன் என்ற அர்த்தத்தில் தான் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post பணம் தந்தால்தான் திறப்பு விழாக்களுக்கு வருவேன்: ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Suresh Gopi ,Thiruvananthapuram ,Thrissur Lok Sabha ,Kerala ,Union Minister of State ,Tourism and Petroleum ,Suresh Gobi ,Guruvayur ,
× RELATED பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட...