×

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 3வது சுற்று போட்டியில் இங்கிலாந்து 21 வயது எம்மா ராடுகானு, 6-2, 6-3 என 9ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியை வீழ்த்தினார். 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், 6-4, 6-0 என இங்கிலாந்தின் சோனாய் கர்தலையும், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4,6-3 என உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கையும், குரோஷியாவின் டோனா வெக்கிச் 7-6, 6-7, 6-1 என உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவையும் வீழ்த்தி 4வதுசுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒற்றையரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சி்ன்னர் 6-1, 6-4,6-2 என செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக்கை வென்று 4வதுசுற்றுக்குள் நுழைந்தார்.

The post விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் சின்னர் ராடுகானு வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sinner Raduganu ,Wimbledon ,London ,Wimbledon tennis ,Grand Slam ,England ,Emma Raduganu ,Dinakaran ,
× RELATED நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா.. #illaiyaraja #Paris #London #DinakaranNews