×

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றனர். அதன்படி நேற்று 65,775 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், தங்களது வேண்டுதலுக்கேற்ப கோயில் வளாகத்தில் வைக்கப்பட்ட உண்டியல்களில் நகை, பணம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இவற்றை தினமும் இரவில் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று ₹3.41 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 அறைகள் நிரம்பியுள்ளன. நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றிவரும் பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,Swami ,
× RELATED கொரோனா காலக்கட்டத்தில்...