×

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

பழநி : பழநியில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை ஏற்படுத்த வேண்டுமென ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வேதுறை அமைச்சருக்கு பழநி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தென்னந்தியாவில் உள்ள முக்கிய கோயில்கள் திருப்பதி மற்றும் பழநி ஆகியவை ஆகும். இந்தக் கோயில்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதியில் இருந்து காட்பாடி, சேலம், திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி மற்றும் கோவை வழியாக 8 ரேக்குகள் கொண்ட வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும். இதனால் பக்தர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கும் அனைத்து தரப்பினரும் பயனடைவர்.

இதுபோல் பழநி வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கும் தினசரி ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vande Bharat Seva Passenger Welfare Association ,Palani-Tirupati ,Palani ,Railway passengers welfare ,Vande Bharat ,service ,Tirupati ,Palani Railway Passenger Welfare Association ,Minister of ,Railways ,South India ,
× RELATED பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில்...