- தேனி போடேந்திரபுரம்
- பிறகு நான்
- போடேந்திரபுரம்
- உப்புக்கோட்டை
- Kuchanur
- தேசிய நெடுஞ்சாலை
- தேனி கம்பம்
- பிறகு நான்…
- தின மலர்
தேனி : தேனி அருகே போடேந்திரபுரம் விளக்கில் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனியில் இருந்து உப்புக்கோட்டை, குச்சனூர் செல்வதற்கான சாலை தேனி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது. இதில் தேனியில் இருந்து கம்பத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் முத்துதேவன்பட்டியடுத்துள்ள பிரிவிலிருந்து போடேந்திரபுரம் கிராமத்தின் வழியாக உப்புக்கோட்டை, குச்சனூர் செல்கிறது .
இதில் போடேந்திரபுரம் விளக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச் சாலை உள்ளது. தேனி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து போடேந்திரபுரம் வழியாக உப்புக்கோட்டை மற்றும் குச்சனூருக்கு செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இத்தகைய போடேந்திரபுரம் விளக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய பிரிவானது மிகவும் ஆபத்தானதாகவும் அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய பகுதியாகவும் உள்ளது. பகல் நேரங்களைக் காட்டிலும் இரவு நேரங்களில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் உடல் உறுப்பு இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
தேனியில் இருந்து போடி செல்லக்கூடிய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச்சாலை பிரிவில் இதே போன்று ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தேனி போக்குவரத்து காவல்துறையானது நெடுஞ்சாலை ஆணைய புறவழிச் சாலை பகுதியில் ரவுண்டானா அமைத்தது. இதன் காரணமாக தற்போது விபத்துக்கள் முழுமையாகவே தடுக்கப்பட்டுள்ளது. எனவே இதே போன்ற ரவுண்டானாவை போடேந்திரபுரம் விளக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி போடேந்திரபுரம் விலக்கில் ரவுண்டானா அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.