×

பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

 

பெரம்பலூர், ஜூலை 6: பெரம்பலூர் தந்தை ரோவர் தொழில் நுட்பக் கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்து உரையாற்றினார். துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் மற்றும் உயர்கல்வி இயக்குனர் சக்தீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் தளவாயில் இயங்கிவரும் இந்தியா சிமென்ட் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் ஆர்.அசோக் சிறப்புரையாற்றுகையில், மாணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்தி கொள்ளும் தன்மையையும், தனக்கென தனித்தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் சிவகுமார் வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் ராமச்சந்திரன் மற்றும் முதலாமாண்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் அருண்பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதலாமாண்டுத் துறை தலைவர் கணபதி நன்றி கூறினார்.
அலுவலக மேலாளர் செந்தில்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தார்.

The post பெரம்பலூர் தந்தை ரோவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Father Rover Polytechnic College ,Perambalur ,Father Rover Technical College ,Dr. ,Varadarajan ,Managing Director ,Rover Educational Institutions ,Deputy ,Melan ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே 261.228 கிலோ குட்கா பதுக்கியவர் கைது