- மங்களமேடு குன்னம்
- குன்னம் தாலுகா மங்கலமேடு
- வேலு
- மயுர்
- மங்களமேடு காவல் நிலையம்
- பெரம்பலூர் மாவட்டம்
- குன்னம் தாலுகா
- மங்கலமேடு
- தின மலர்
குன்னம், ஜூலை 6: குன்னம் தாலுகா மங்களமேடு அருகே மின்சார கம்பி வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா மங்களமேடு காவல் சரகத்திற்குட்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் ராஜி (40), கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை பென்னகோணம் கிராமத்தில் வயலுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சோளக்காட்டில் போடப்பட்டிருந்த மின்சார கம்பிவேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போலீசார் விரைந்து சென்று ராஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post மங்களமேடு அருகே மின்சார கம்பிவேலியில் சிக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.