நீடாமங்கலம், ஜூலை 6: திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு பெரும்பாலான பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தொடர்ந்து தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் நீர் தேங்காமல் சரியாக பாசனத்திற்கும் வடிகாலில் சென்று அடைகிறது.
இந்நிலையில் நீடாமங்கலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் தெரு அருகில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால் மதகு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கான தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்றது. இந்த பணியினால் அனுமந்தபுரம், முல்லை வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராம விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம் appeared first on Dinakaran.