×
Saravana Stores

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

 

திருவாடானை, ஜூலை 6: திருவாடானை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரூர் பகுதியில் செயல்படும் அரசுப்பள்ளி வளாக சமையலறை கூடத்தில் போதிய இடவசதியின்றி நெருக்கடியான சூழலில் கடந்த பல ஆண்டுகளாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரேஷன் கடை செயல்பட்டு வரும் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

இதனால் இங்கு ரேஷன் பொருட்கள் வாங்கச் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, பாரூர் வடக்கு குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Parur ,Tiruchi-Rameswaram National Highway ,Dinakaran ,
× RELATED பாழடைந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசு, கன்றுகுட்டி மீட்பு