×

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

ஊட்டி: ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கான ரூ.822 கோடி குத்தகை பாக்கி நிலுவை வைத்திருந்ததால் அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் குதிரை பந்தய மைஇந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின் போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயத்தை நடத்தி வருகிறது.  கடந்த 2001க்கு பின் 2023ம் ஆண்டு வரை கடந்த 22 ஆண்டுகளாக குத்தகை தொகையை மெட்ராஸ் கிளப் நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால், நிலுவையில் உள்ள குத்தகை தொகை, உயர்த்தப்பட்ட தொகை என ரூ.822 கோடி குத்தகை தொகை பாக்கியை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வரி பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி நேற்று ஊட்டி ஆர்டிஓ மகராஜ் தலைமையிலான அதிகாரிகள் குதிரை பந்தய மைதான கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

அரசு கையகப்படுத்திய 52.34 ஏக்கர் நிலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பெபிதா தலைமையில் தோட்டக்கலை ஊழியர்கள் அங்கு வந்து பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கினர். மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

The post ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Ooty racecourse ,Ooty ,Madras Race Club administration ,Ooty Central Bus Station ,Nilgiris district ,Ooty Horse Race Ground ,Dinakaran ,
× RELATED நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்