×
Saravana Stores

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

திருச்சி: திருச்சி அருகே சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று நண்பனை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் நவீன் குமார் (29). இவரும் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கலைப்புலி ராஜாவும் (29) நண்பர்களாக இருந்து வந்தனர்.

இதில் கலைபுலி ராஜா மீது சில மாதங்களுக்கு முன்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், நவீன்குமார் தனது நண்பர்களை கலைப்புலி ராஜாவுடன் பேசக்கூடாது என தடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கலைப்புலி ராஜா, தனது நண்பருடன் சேர்ந்து நவீன்குமாரை சில தினங்களுக்கு முன்பு அய்யன் வாய்க்கால் கரையில் அடித்துள்ளார். கலைப்புலி ராஜா, சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை ஏற்றுக் கொண்ட நவீன் தனது மைத்துனர் பிரேம் குமார் மற்றும் தனது நண்பன் பிரதீப் இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளனர்.

அங்கு கலைப்புலி ராஜா, நவீனிடம் மன்னிப்பு கேட்கவே சமாதானம் அடைந்த அவர், நண்பருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கலைப்புலி ராஜா மறைத்து வைத்திருந்த அரிவாளால் நவீன்குமார் முகத்தில் வெட்டியதில் இறந்தார். இந்நிலையில், கொலையாளிகள் தச்சன் குறிச்சி – சிறுகனூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற்உகலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர் ஸ்ரீநாத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதில் தப்பியோட முயன்ற கலைப்புலி ராஜாவை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற ஸ்ரீநாத் கீழே விழுந்ததில் லேசான காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்த கலைப்புலி ராஜா லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vausi ,Lalgudi ,
× RELATED தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி...