- சுசீந்திரம் கலைக்கூடம்
- சுசீந்திரம்
- கயல்விசி
- தாணுமாலிய சுவாமி கோவில்
- Susindram
- கிராம நிர்வாக அலுவலர்
- சுசீந்திரம் காவல்
- சுசீந்திரம் கலைக்கூடம்
சுசீந்திரம்,ஜூலை 6: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் அருகே உள்ள கலையரங்கத்தில் சுமார் 69 வயது உடைய முதியவர் இறந்து கிடப்பதாக சுசீந்திரம் கிராம நிர்வாக அதிகாரி கயல்விழிக்கு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து தர்மம் எடுத்து வந்தது தெரிய வந்துள்ளது உடனடியாக அவரது சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுவரையும் அவரை சார்ந்த உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க கூடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவர் பற்றி தகவல் அறிந்தால் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post சுசீந்திரம் கலையரங்கத்தில் முதியவர் சடலம் appeared first on Dinakaran.