- ஆத்தூர் பள்ளி
- அருமுக்கனேரி
- ஆத்தூர் பள்ளி
- ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
- ஆத்தூர்
- மேயர்
- கமால்டின்
- தின மலர்
ஆறுமுகநேரி, ஜூலை 6: ஆத்தூர் பள்ளியில் சத்துணவு தணிக்கை சிறப்புக்கூட்டம் நடந்தது. ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியில் சத்துணவு திட்ட தணிக்கைக்குழு சார்பில் சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஆத்தூர் பேரூராட்சித்தலைவர் கமால்தின் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ரஞ்சித்சிங் வரவேற்றார். இதில் சத்துணவு திட்டம் பற்றி செய்யப்பட்ட தணிக்கையின் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.கூட்டத்தில் தணிக்கை குழுவைச்சேர்ந்த சிவகுருநாதன், ஜெயபாலன், கவுன்சிலர்கள் சிவா, அசோக்குமார், கமலச்செல்வி, அருணா குமாரி, முத்துலட்சுமி, வசந்தி மற்றும் மாணவ, மாணவியரும், பெற்றோரும், ஆசிரியர்களும், பேரூராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சமூக நலத்துறையினர் செய்திருந்தனர்.
The post ஆத்தூர் பள்ளியில் சத்துணவு தணிக்கை சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.