மதுரை, ஜூலை 6: வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் எடுத்துவரப்பட்டு மதுரை அரசரடியில் உள்ள 30 அடி ஆழமுள்ள ராட்சத நீர்த்தேக்கத்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. பிறகு அங்கிருந்து குழாய்கள் மூலம் மாநகராட்சியில் உள்ள பழைய 72 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய 28 வார்டுகளுக்கு லாரிகள் மூலம் குடிநீரை மாநகராட்சி சப்ளை செய்து வருகிறது. மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ராட்சத நீர்த்தேக்கத் தொட்டியின் மேல்பகுதி திறந்து கிடந்தது. இதனை ஆய்வு செய்து உடனடியாக மூட வேண்டும் என மாமன்றக்குழு தலைவர் ஜெயராம் உள்பட திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மேயர் இந்திராணி பொன்வசந்த் உத்தரவின்பேரில் அந்த தொட்டியை கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். பின்னர் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு திறந்து கிடந்த ராட்சத திறப்பு உடனடியாக அடைக்கப்பட்டது.
The post குடிநீர் தொட்டியை கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.