×

திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா மீது வழக்கு?

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராசில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த ஹத்ராசுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா, மகளிர் ஆணைய தலைவர் ரேகா வந்திருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இணைத்து, சர்ச்சை கருத்தை பதிவிட்டு இருந்தார். எம்பி மஹூவா மொய்த்ராவின் இந்த கருத்துக்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும் போலீசார் எம்பி மஹூவா மொய்த்ரா மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் எக்ஸ் பதிவில்,‘‘தலைவர் ரேகா சர்மாவிற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம். மொய்த்ராவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் விரிவான நடவடிக்கை அறிக்கையை 3 நாட்களில் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா மீது வழக்கு? appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Mahua Moitra ,New Delhi ,Uttar Pradesh ,Hadhras ,National Commission for Women ,President ,Rekha Sharma ,
× RELATED ராஜினாமா செய்ய முடிவு மம்தாவுக்கு எதிராக திரிணாமுல் எம்.பி போர்க்கொடி