×

கோபா அமெரிக்கா கால்பந்து; அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி

டெக்சாஸ்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை நடந்த முதல் கால்இறுதி போட்டியில் உலக சாம்பியனான அர்ஜென்டினா- ஈக்வடார் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்க ஈக்வடார் கடுமையாக போராடியது. போட்டியின் 91வது நிமிடத்தில் அந்த அணியின் கெவின் ரோட்ரிக்ஸ் கோல் அடித்தார். இதனால் 1-1 என போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

 

The post கோபா அமெரிக்கா கால்பந்து; அரையிறுதிக்கு அர்ஜென்டினா தகுதி appeared first on Dinakaran.

Tags : Copa America ,Argentina ,Texas ,Copa America football ,United States ,Ecuador ,Lisandro Martinez ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்...