×

வெம்பக்கோட்டை அகழாய்வில் கி.பி. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மன்னரான வீரப்ப நாயக்கர் கால செம்புக காசுக் கண்டெடுப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசுக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில்,”இந்த நாணயம் கி. பி. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது. இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் கி.பி. 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மன்னரான வீரப்ப நாயக்கர் கால செம்புக காசுக் கண்டெடுப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Vembakotta ,King Veerappa Nayaka ,Ministry of Gold South ,Chennai ,Minister ,Thangam Thanarasu ,K. B. ,Madurai ,Nayaka ,king ,Veerappa Nayaka ,Thangam Tennarasu ,
× RELATED வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு