×
Saravana Stores

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் வட்டாட்சியர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்த விவகாரத்தில் வட்டாட்சியர் மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் தனது வீடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். எனினும் அவரது வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் வீட்டை இடிக்க முயன்றனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்குள் சென்று மண்ணெணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விவகாரத்திற்கு அண்ணாமலை, ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, விஏஓ பாக்கியஷர்மா பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் வட்டாட்சியர் உட்பட 3 பேர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Kummidipoondi ,Tiruvallur ,Rajkumar ,Tiruvallur district ,Kotakkarai Netaji ,Nagar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி...