×

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சுரண்டை, ஜூலை 5: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயா வெளியிட்ட செய்தி குறிப்பு:
சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு இளநிலை கலை மற்றும் அறிவியல் மாணவ, மாணவிகள் சேர்த்து காலியாக உள்ள இடங்களை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்காக 3.7.2024 முதல் 5.7.2024 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உரிய பதிவு கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள். எனவே மாணவர்கள் விண்ணப்பித்து கல்லூரியில் சேர்ந்து பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் பதிவு செய்யாத மாணவர்களை கல்லூரியில் உள்ள காலியிடங்களில் உரிய வழிமுறைகளை பின்பற்றி 8.7.2024 முதல் கல்லூரியில் முதல்வர் கவுன்சலிங் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : Surandai Government College ,Surandai ,Surandai Kamaraj Government Arts College ,Chief Minister ,Jaya ,Surandai Kamaraja Government Arts College ,Dinakaran ,
× RELATED சாம்பவர்வடகரையில் இரு ஆண்டுகளுக்கு...