தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயபணி மற்றும் மண்பாண்டங்கள் செய்வதற்கு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 434 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண்/களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க www.tnesevai.tn.gov.in வேண்டும். பின்னர் அவர்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது நிலம் தொடர்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டும். இந்தவிண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியர் அவர்கள் அனுமதி வழங்குவார்கள். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மைசான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சான்று அளிக்கப்படவேண்டும்.
வண்டல் மண், களிமண் எடுக்க வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் www.tnesevai.tn.gov.in தெரிந்துக்கொள்ளலாம் மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
The post மண்பாண்டங்கள் செய்ய களிமண் எடுக்க அனுமதி appeared first on Dinakaran.