- ITNT நாள்
- சென்னை
- IDNT நாள்
- தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
- இந்திய அரசு
- தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பம்
- தகவல் தொழில்நுட்பம்
- டிஜிட்டல் சேவைகள் துறை
- தின மலர்
சென்னை: முதல் ஐடிஎன்டி தினத்தை முன்னிட்டு 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆதரவுடன் நிறுவப்பட்ட தமிழ்நாடு தொழில்நுட்ப மையம், தனது முதல் ஐடிஎன்டி (iTNT Hub) தினத்தை வரும் 11ம் தேதி கொண்டாடவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்கிறார். இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளர் தீரஜ் குமார், இந்திய அரசின் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகியவற்றின் துறைத் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து ஐடிஎன்டி மையத்தின் தலைமைச்செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் கூறியதாவது : புதுமைகளின் மூலம் வாழ்வியலை மாற்றும் வகையில் தமிழகத்தில் வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில் நுட்ப புத்தொழில் முனைவோரின் எதிர்காலத்தை உருவாக்க இம்மையத்தின் முக்கியமான முயற்சிகளுக்கு இந்த நிகழ்வு வலுச்சேர்ப்பதாக அமையும்.
ஐடிஎன்டி தினம், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப நிலப்பரப்பை வளர்ப்பதற்காக உலகளாவிய முன்னணி பெருநிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள், புத்தொழில் முனைவு வசதி அமைப்புகள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் 50க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post முதல் ஐடிஎன்டி தினத்தை முன்னிட்டு 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன: தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தகவல் appeared first on Dinakaran.