×

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை, ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் பவித்ரா (5), அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ் மகன் குணா (5). தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்த இருவரும் அங்குள்ள குட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு குருவராஜப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இரு குழந்தைகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Vinayagam ,Ramapuram ,Ranipet district ,Pavitra ,Rajesh ,Guna ,
× RELATED அரக்கோணம் அருகே கடன் தொல்லையால்...