×
Saravana Stores

ஜி.ஹெச்.சில் ரகளை செய்த போதை வாலிபர்

தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியன், பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 1ம் தேதி சூடப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ்(34) என்பவர், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பார்ப்பதற்காக உறவினர் என கூறிக்கொண்டு, செல்வகுமார்(28) என்பவர் வந்தார். குடிபோதையில் இருந்த அவர், மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டதோடு செவிலியர்களிடம் தகராறு செய்து, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஜி.ஹெச்.சில் ரகளை செய்த போதை வாலிபர் appeared first on Dinakaran.

Tags : GH. ,Dharmapuri ,Balasubramanian ,Palakodu Government Hospital ,Dharmapuri District ,Palakodu Police Station ,Nagaraj ,Sudapatti ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...