×

கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா

நத்தம், ஜூலை 5: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ஆனி மாத பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மூலவர் செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு சுற்று வட்டாரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ விழா appeared first on Dinakaran.

Tags : Kailasanathar Temple ,Natham ,Ani Mata Pradosha Festival ,Natham Kovilpatti ,Pradosha ,
× RELATED நத்தம் அருகே தீ விபத்தில் குடிசை நாசம்