- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழு
- திருவள்ளூர்
- அலுவலகம்
- யூனியன் கமிட்டி
- ஜனாதிபதி
- ஜெயசீலி ஜெயபாலன்
- துணை ஜனாதிபதி
- எம் பார்கதுல்லா கான்
- எம்.ஜி.குணசேகரன்
- கே. ரவி
திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜி.குணசேகரன், கே.ரவி, மேலாளர் (நிர்வாகம்) விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், டி.எம்.எஸ்.வேலு, கே.விமலா குமார், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், கே.ஆர்.வேதவல்லி சதீஷ்குமார், ஆர்.திலீப்ராஜ், விஹரி சாந்தி, தரணி, நவமணி கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநில நிதி குழு மாநியத்திலிருந்து ரூ.1 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்தை 15 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், பொது நிதியிலிருந்து ஒவ்வொரு ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் ரூ.80 லட்சத்தையும் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் ஒதுக்கீடு செய்தார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின்மோட்டார் பொருத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்வதென்றும், கிளம்பாக்கம், புல்லரம்பாக்கம், மேலகொண்டையார் ஆகிய ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள விபிஎஸ் கட்டிடங்களை விரைந்து முடிக்க நிதி ஒதுக்கீடு செய்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.