×

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாயூரபுரம் குரு பாம்பன் மத் குமரகுரு தாஸ அன்னதானம் சபையின் தலைவர் டி.சரவணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் சபை 1999-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் அன்னதானம் செய்து வருகிறோம். பாம்பன் சுவாமிக்கு 1929-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை குப்புசாமி செட்டியார் தலைமையிலான சபை பூஜைகளை செய்து வந்தது. பின்னர் இந்த கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், இந்த கோவிலில் பூஜை செய்ய மேலும் பல சபைகள் உருவாக்கின. இந்தநிலையில் பாம்பன் சுவாமிகளின் சமாதியை வளைத்து கோவில் போல உருவாக்கி, வருகிற 12ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாம்பன் சுவாமி கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை மீறியுள்ளனர். எனவே, வருகிற 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். மனுதாரர், தன் கோரிக்கை குறித்து, அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து, அதுகுறித்து வருகிற 24-ம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துகூறலாம். இந்த கும்பாபிஷேகத்தின் போது சட்டஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படக்கூடாது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

The post திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiur Bambhan Swami Temple ,Chennai High Court ,Chennai ,Mayurapuram Guru Bomban Math Kumaraguru ,Anthanam Sabha T. ,Saravanan ,Thiruvanmiur Bambon Swami Temple ,Thiruvanmiur Bomban Swami Temple ,
× RELATED பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான...