×

திருமணத்துக்கு முன் கர்ப்பமானார் இலியானா: கேத்ரினா கைப் சகோதரர் காரணமா?

 

மும்பை: காதல், டேட்டிங் விவகாரத்திற்கு இடையே நடிகை இலியானா கர்ப்பமாகி உள்ளதால், அவரது வருங்கால கணவரின் பெயரை தெரிவிக்குமாறு நெட்டிசன்கள் நச்சரிக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றின் முதல் புகைப்படத்தில் ‘சாகசம் தொடங்குகிறது’ என்று எழுதப்பட்ட ஒரு டி-ஷர்ட்டின் படம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது புகைப்படத்தில், ஒரு செயினில் பதக்கம் உள்ளது. அதில் மம்மா (அம்மா) என்று எழுதப்பட்டுள்ளது. இந்த பதிவின் கேப்ஷனில், ‘மிக விரைவில்… உங்களைச் சந்திக்க வேண்டும். என்னால் காத்திருக்க முடியவில்லை… லிட்டில் டார்லிங்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை தொடர்ந்து, பலரும் பலவித கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இலியானா விரைவில் குழந்தைக்கு தாயாக உள்ளார் என்றும், அதற்காக அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வந்தனர்.

இன்னும் சிலர், குழந்தையின் தந்தை யார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில், இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இருந்தும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக்காரர் ஆண்ட்ரூ நீபோன் என்பரை இலியானா காதலித்து வந்தார். அதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. இருப்பினும், 2019ம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு நடிகை கேத்ரினா கைப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலுடன் இலியானா டேட்டிங்கில் இருந்தார். ஆனால் இருவரும் காதலை மறைத்து வந்தனர். இந்த நிலையில் இலியானா கர்ப்பமான செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இலியானாவின் குழந்தைக்கு கேத்ரினா கைப்பின் சகோதரர்தான் அப்பா என பாலிவுட் மீடியாவில் பேச்சு கிளம்பியுள்ளது.

The post திருமணத்துக்கு முன் கர்ப்பமானார் இலியானா: கேத்ரினா கைப் சகோதரர் காரணமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : iliana ,cathrina guype ,Mumbai ,Ileana ,Bollywood ,Ileana de Cruz ,Ilyana ,Kathrina Guype ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!