×
Saravana Stores

அதிபர் பைடனை பழைய குப்பை என்று கிண்டல்: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் வீடியோவால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனுக்கு எதிராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமக்கு எதிரான வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று முன்னாள் அதிபர் டோனல் டிரம்ப் பேசிய வீடியோ ஒன்று விவாத பொருளாக மாறியுள்ளது. ஒல்ஃப் மைதானம் ஒன்றில் பாட்டரி காரில் பயணம் செய்த முன்னாள் அதிபர் டிரம்ப் தன்னுடைய சகாக்களுடன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அதிபரும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜோபைடனை கடுமையான வார்த்தைகளால் டிரம்ப் கிண்டல் செய்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வயதான குப்பை குவியலை தாம் உதைத்து தள்ளியதாக பைடனை குறிப்பிட்டு அந்த வீடியோவில் டோனல் டிரம்ப் பேசுகிறார்.

அத்துடன் ரஷ்ய அதிபர் புடின் உடனும் சீன அதிபர் உடனும் பைடனால் பேச முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப் அவரை அதிபர் பதவியிலிருந்து தாம் அகற்றிவிட்டதாகவும் கூறுகிறார். தமக்கு பொடியாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்படுவார் என்று கூறியுள்ள டிரம்ப் பைடனை விட கமலா சிறப்பானவர் என்று குறிப்பிட்டுள்ளார். டோனல் டிரம்ப்புடன் அட்லாண்டாவில் அண்மையில் நடத்திய நேருக்கு நேர் விவாஹத்தில் ஜோ பைடன் தடுமாறியது சலசலப்பை ஏற்படுத்தியது. அவருக்கு மூளை பாதிப்பு நோய் இருப்பதை ஊடகங்கள் மறைத்து விட்டதாக பாக்ஸ் நியூஸ் ஆசிரியர் குற்றம்சாட்டியிருந்தார். பைடனை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று சொந்த கட்சி எம்.பிக்களே போர் கொடி உயர்த்திய நிலையில் ட்ரம்பின் தற்போதைய பேச்சு பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற கருத்துக்கு பளு சேர்த்துள்ளது.

The post அதிபர் பைடனை பழைய குப்பை என்று கிண்டல்: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் வீடியோவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Donald Trump ,Washington ,Vice Chancellor ,Kamala Harris ,Jobidan ,US presidential election ,Grounds ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் நவ. 5ல் அதிபர் தேர்தல்;...